நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
27.அகமும் ஆசையும்


அகம்
ஆசைக்குள்
ஆட்பட்டுக்கொண்டிருந்தால்
ஆண்டவனும்
அகக்கண்களுக்கு
அகப்படபோவதில்லை,
ஆகமும்
அழியாமல்
அகிலத்தில்
அவதாரமெடுத்துக்கொண்டே
அலைந்துக்கொண்டிருக்கும்

அகம் - உள்ளம்
ஆகம் - உடம்பு,உயிர்
ஆசை - இச்சை
Labels: அகம், அழிவு, ஆகம், ஆசை, ஆண்டவன், இறைவன், இன்பம், உடம்பு, உள்ளம், கடவுள்
அன்புடன்
தமிழ் at
2:31 PM

21.அவயங்களும் அவலங்களும்


ஆண்டவன்
அவயங்களை
அளித்தது
ஆனந்தத்தை மட்டும்
அனுபவிக்க என்று
அனுமானிக்காதே
அல்லல் படும் உயிர்களின்
அவலங்களையும்
அகற்றிடவும் தான்

Labels: அவயம், ஆண்டவன், ஆனந்தம், இறைவன், இன்னல், உறுப்பு, கடவுள், மகிழ்ச்சி
அன்புடன்
தமிழ் at
9:22 AM

11.இடிந்துவிடாதீர்கள்
![]() |

இறைவன்
இருந்ததையும் எடுத்துக்கொண்டானா?
இடிந்துவிடாதீர்கள்
உங்களுக்கு அதைவிட
மிகப்பெரிய பரிசு ஒன்றை
கொடுக்கப்போகிறான் என்று அர்த்தம்.

Labels: ஆண்டவன், இறைவன், கடவுள், பரிசு, வருத்தம்
அன்புடன்
தமிழ் at
10:46 AM

8.அகமும் ஆண்டவனும்
![]() |

அகம் என்பது
ஆண்டவனிடம்
அகப்பட்டுக்கொண்டால்
அழுக்கு,
அசுத்தம் எல்லாம்
அகராதியில் மட்டுமே
அகப்படும்.

Labels: அகம், அகராதி, அசுத்தம், அழுக்கு, ஆண்டவன், இறைவன், உள்ளம், கடவுள்
அன்புடன்
தமிழ் at
3:06 PM





