நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
27.அகமும் ஆசையும்


அகம்
ஆசைக்குள்
ஆட்பட்டுக்கொண்டிருந்தால்
ஆண்டவனும்
அகக்கண்களுக்கு
அகப்படபோவதில்லை,
ஆகமும்
அழியாமல்
அகிலத்தில்
அவதாரமெடுத்துக்கொண்டே
அலைந்துக்கொண்டிருக்கும்

அகம் - உள்ளம்
ஆகம் - உடம்பு,உயிர்
ஆசை - இச்சை
Labels: அகம், அழிவு, ஆகம், ஆசை, ஆண்டவன், இறைவன், இன்பம், உடம்பு, உள்ளம், கடவுள்
அன்புடன்
தமிழ் at
2:31 PM

26.அகவையும் அகமும்


அகவை என்பது
அகத்திற்கு
உட்பட்டது
உங்களின் உள்ளம்
உடம்பு என்னும்
உடன்பாட்டை
உடைத்து எறிந்தால்
வாழ்க்கை என்பது
வண்ணத்துப்பூச்சியாய்
வட்டமிட்டு
சிறகடித்துப் பறக்கும்.

ஆங்கிலத்தில் - மார்க்கு துவின்
மொழியாக்கம்
Labels: அகம், அகவை, ஆகம், உடம்பு, உள்ளம், வண்ணத்துப்பூச்சி, வயது, வாழ்க்கை
அன்புடன்
தமிழ் at
12:23 PM

25.வெற்றிக்கான வழி


வெற்றியை
தூக்கி வைத்துக்கொள்ள
தலையும்
தோல்வியைத்
தேக்கி வைத்துக்கொள்ள
உள்ளமும்
உகந்த இடமும் அல்ல
உயர்வுக்கும் வழியும் அல்ல.

ஆங்கிலத்தில் - வின்சடன் சர்ச்சில்
மொழியாக்கம்
Labels: அகம், உயர்வு, உள்ளம், சிரம், தலை, தோல்வி, வழி, வெற்றி
அன்புடன்
தமிழ் at
3:39 PM

23.கேள்விக்கணைகள்


அடுத்தவர் மேல்
அம்புக்கணைகளை
அள்ளி வீசும் முன்
உங்கள்
உள்ளங்களை, கொஞ்சம்
உரசிப் பாருங்கள். நீங்களே
உணர்ந்துக் கொள்வீர்கள்
அது தங்கம்
அல்ல என்று

Labels: அகம், அம்புக்கணை, உள்ளம், கேள்வி, தங்கம்
அன்புடன்
தமிழ் at
7:49 PM

20.சோம்பல்


அசதி என்பது
ஆசானமிட்டு
அகத்தே
அமர்ந்து கொண்டால்
வசதி என்பது
வாசற்பக்கம் கூட
வராது.

Labels: அகம், அசதி, உள்ளம், சோம்பல், வசதி, வாசல்
அன்புடன்
தமிழ் at
2:57 PM

19.உள்ளம்


இதயம் ஒருபொழுதும் கொடுப்பதை
இழந்துவிடுவதில்லை.அது
இன்னொருவரின்
இதயத்தில்
இருக்கும் என்பதை மறந்துவிடாதே.

Labels: அகம், இதயம், இழப்பு, உள்ளம்
அன்புடன்
தமிழ் at
11:48 PM

16.கண்ணீர்


கண்ணீர் என்பது
கண்ணிலிருந்து விழுந்து
கன்னத்தை நனைப்பதல்ல,
இதயத்திலிருந்து வடிந்து
உள்ளத்தை உணர்த்துவது.

மொழியாக்கம்
Labels: அகம், இதயம், உள்ளம், கண், கண்ணீர், கன்னம்
அன்புடன்
தமிழ் at
1:53 PM

12.உள்ளம் உன் வாசம்
![]() |

உந்தன்
உடம்பை
உருக்குலைக்க
உந்தன்
அனுமதி
அவசியமில்லை
ஆனால்
உந்தன்
உள்ளத்தை
உடைக்க
உந்தன்
உடன்படிக்கை
அவசியம்

Labels: அகம், அனுமதி, ஆகம், உடம்பு, உடன்படிக்கை, உள்ளம்
அன்புடன்
தமிழ் at
11:00 AM

8.அகமும் ஆண்டவனும்
![]() |

அகம் என்பது
ஆண்டவனிடம்
அகப்பட்டுக்கொண்டால்
அழுக்கு,
அசுத்தம் எல்லாம்
அகராதியில் மட்டுமே
அகப்படும்.

Labels: அகம், அகராதி, அசுத்தம், அழுக்கு, ஆண்டவன், இறைவன், உள்ளம், கடவுள்
அன்புடன்
தமிழ் at
3:06 PM

6.அளவீடு
![]() |

அறிவும்
ஆகாரமும் ஒன்று தான்
அதன்
அளவீடு என்பது எவ்வளவு
அகத்தில்
இட்டாய் என்பதில்
இல்லை,
செரிமானத்தில் உள்ளது.

Labels: அகம், அளவு, அறிவு, அன்னம், ஆகாரம், உணவு, உள்ளம், செரிமானம், படிப்பு
அன்புடன்
தமிழ் at
11:37 AM

5.எதைத் தந்திட
![]() |

மலர் உண்டு, மணம் வீசிட
மரம் உண்டு, நிழல் தந்திட
மதி உண்டு, ஒளி தந்திட
மனிதா நீ உண்டு ,
எதைத்தந்திட
இதை மனதிலிட்டு
மாற்றோரும் புகழ்ந்திடும்வண்ணம்
மாண்புடனே வாழ்ந்திடு.

Labels: உள்ளம், ஒளி, திங்கள், நிழல், புகழ், மணம், மதி, மரம், மலர், மனம், மனிதன், வாழ்க்கை
அன்புடன்
தமிழ் at
4:06 PM

4.உதடுகள்
![]() |

உள்ளம்
உரைக்க மறைப்பதை
உதடுகள்
உணர்த்திவிடும்

அன்புடன்
தமிழ் at
1:34 PM

3.உள்ளமெல்லாம்
![]() |

உள்ளமெல்லாம்
வெள்ளையானால்
வாழ்வு எல்லாம்
பசுமை ஆகும்.

Labels: அகம், உள்ளம், பசுமை, மனம், வாழ்க்கை, வெண்மை
அன்புடன்
தமிழ் at
10:29 PM









