நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
26.அகவையும் அகமும்


அகவை என்பது
அகத்திற்கு
உட்பட்டது
உங்களின் உள்ளம்
உடம்பு என்னும்
உடன்பாட்டை
உடைத்து எறிந்தால்
வாழ்க்கை என்பது
வண்ணத்துப்பூச்சியாய்
வட்டமிட்டு
சிறகடித்துப் பறக்கும்.

ஆங்கிலத்தில் - மார்க்கு துவின்
மொழியாக்கம்
Labels: அகம், அகவை, ஆகம், உடம்பு, உள்ளம், வண்ணத்துப்பூச்சி, வயது, வாழ்க்கை
அன்புடன்
தமிழ் at
12:23 PM

22.வாழ்க்கை


வாழ்க்கை ஒரு
வானவில், அதில்
துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.

மொழியாக்கம்
Labels: இன்பம், ஒளி, துன்பம், நிகழ்வு, மழை, வண்ணம், வாழ்க்கை, வானவில்
அன்புடன்
தமிழ் at
10:51 AM

15.நம்பிக்கை


நாளைய
நம்பிக்கை என்பது
இன்றைய வாழ்க்கையின்
இதயத்துடிப்பை போன்றது.

Labels: இதயத்துடிப்பு, நம்பிக்கை, நாளை, வாழ்க்கை
அன்புடன்
தமிழ் at
9:15 PM

14.முடியும்


முடியும் என்பது
முன்னேறத்துடிப்பவரின்
முதல் வார்த்தை மட்டுமல்ல
முடிவும்,
மூச்சும் அது தான்.

Labels: துடிப்பு, நம்பிக்கை, முடியும், முடிவு, முன்னேற்றம், மூச்சு, வாழ்க்கை
அன்புடன்
தமிழ் at
10:24 AM

5.எதைத் தந்திட
![]() |

மலர் உண்டு, மணம் வீசிட
மரம் உண்டு, நிழல் தந்திட
மதி உண்டு, ஒளி தந்திட
மனிதா நீ உண்டு ,
எதைத்தந்திட
இதை மனதிலிட்டு
மாற்றோரும் புகழ்ந்திடும்வண்ணம்
மாண்புடனே வாழ்ந்திடு.

Labels: உள்ளம், ஒளி, திங்கள், நிழல், புகழ், மணம், மதி, மரம், மலர், மனம், மனிதன், வாழ்க்கை
அன்புடன்
தமிழ் at
4:06 PM

3.உள்ளமெல்லாம்
![]() |

உள்ளமெல்லாம்
வெள்ளையானால்
வாழ்வு எல்லாம்
பசுமை ஆகும்.

Labels: அகம், உள்ளம், பசுமை, மனம், வாழ்க்கை, வெண்மை
அன்புடன்
தமிழ் at
10:29 PM





