நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
5.எதைத் தந்திட
![]() |

மலர் உண்டு, மணம் வீசிட
மரம் உண்டு, நிழல் தந்திட
மதி உண்டு, ஒளி தந்திட
மனிதா நீ உண்டு ,
எதைத்தந்திட
இதை மனதிலிட்டு
மாற்றோரும் புகழ்ந்திடும்வண்ணம்
மாண்புடனே வாழ்ந்திடு.

Labels: உள்ளம், ஒளி, திங்கள், நிழல், புகழ், மணம், மதி, மரம், மலர், மனம், மனிதன், வாழ்க்கை
அன்புடன்
தமிழ் at
4:06 PM

4.உதடுகள்
![]() |

உள்ளம்
உரைக்க மறைப்பதை
உதடுகள்
உணர்த்திவிடும்

அன்புடன்
தமிழ் at
1:34 PM

3.உள்ளமெல்லாம்
![]() |

உள்ளமெல்லாம்
வெள்ளையானால்
வாழ்வு எல்லாம்
பசுமை ஆகும்.

Labels: அகம், உள்ளம், பசுமை, மனம், வாழ்க்கை, வெண்மை
அன்புடன்
தமிழ் at
10:29 PM

2.சாய்வதற்கு ......
![]() |

சாய்வதற்கு சுவரைத்தேடாதே
சாய்ந்தே விடுவாய்.
சரித்திரம் பேசவேண்டுமா?
இந்த தென்னைமரத்தைப்பார்
இடிக்கும் மழைக்கும்
இசைந்து கொடுப்பதை

Labels: இடி, சுயம், தனித்தன்மை, தென்னை, மரம், மழை
அன்புடன்
தமிழ் at
5:05 PM

1.அழகு = ஆனந்தம்
![]() |

அழகு என்பது ஒருவர்
ஆனந்தமாக இருப்பது.
அந்த ஆனந்ததிற்கு
ஆதிமூலம் நாம் என்றால்,
அதைவிட சிறந்தது வேறு என்ன?

Labels: அழகு, ஆனந்தம், மகிழ்ச்சி
அன்புடன்
தமிழ் at
4:22 PM








